Shein, Temu போன்ற சீன பொருட்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!

16 வைகாசி 2025 வெள்ளி 22:41 | பார்வைகள் : 780
அமெரிக்கா-சீனா வர்த்தகப் போரால், சீனாவிலிருந்து ஐரோப்பாவுக்கு வரும் குறைந்த மதிப்புள்ள, அதிகமான பொதிகள் வருவதைத் தடுக்கும் முயற்சியாக, பிரான்ஸ் அரசு கண்காணிப்புகளை மூன்று மடங்காக அதிகரிக்க முடிவெடுத்துள்ளது.
வணிகத்துறை அமைச்சர் வெரொனிக் லுவாஜி (Véronique Louwagie), ஷீன் (shein) மற்றும் தெமு (Temu) போன்ற சீன தளங்கள், தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் விதிகளை மீறுகின்றன எனக் கூறி, 150 யூரோக்களுக்கும் குறைந்த மதிப்புள்ள சிறிய பொதிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.
மேலும், சீனத்தள விளம்பரத்தையும் தடைசெய்யும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. 2024ஆம் ஆண்டில் மட்டும் ஐரோப்பிய சந்தைக்கு சுமார் 4.6 பில்லியன் யூரோக்களுக்கு குறைந்த மதிப்புள்ள பொதிகள் வந்துள்ளன. அதில் பெரும்பான்மையான பொதிகள் சீனாவிலிருந்து பிரான்சுக்கு மட்டும் 800 மில்லியன் பொதிகள் வந்துள்ளன. இந்த நிலையை கட்டுப்படுத்த புதிய வரிகள் மற்றும் கட்டணங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.