வீதி விபத்து : பலி எண்ணிக்கை 247 ஆக உயர்வு!!

16 வைகாசி 2025 வெள்ளி 21:36 | பார்வைகள் : 560
சென்ற 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டு ஏப்ரலில் வீதி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சென்ற ஆண்டு ஏப்ரலில் 237 பேரும், நடப்பு ஆண்டின் ஏப்ரலில் 247 பேரும் வீதி விபத்தில் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து மாதங்களாக வீதி விபத்து பலி எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துவந்த நிலையில், இம்மாதம் 4% சதவீதத்தால் (அல்லது 10 பேரினால்) அதிகரித்துள்ளது.
இந்த 247 பேரில் 125 பேர் வாகன சாரதிகள் எனவும், 37 பேர் பாதசாரிகள் எனவும், 24 பேர் மிதிவண்டி ஓட்டுனர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வருட ஏப்ரலில் 4,496 வீதி விபத்துக்கள் பிரான்சின் பிரதான நிலப்பரப்பில் இடம்பெற்றுள்ளது எனவும், அதுவும் சென்ற ஆண்டு ஏப்ரலோடு ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது (5% சதத்தால்) எனவும் தெரிவிக்கப்படுகிறது.