€20 பில்லியன் முதலீடுகள்! - எட்டாவது Choose France மாநாடு!!

16 வைகாசி 2025 வெள்ளி 20:36 | பார்வைகள் : 659
மே 19 ஆம் திகதி திங்கட்கிழமை பரிசில் Choose France (பிரான்சை தேர்ந்தெடுங்கள்) உச்சிமாநாடு இடம்பெற உள்ளது. இந்த மாநாட்டின் போது €20 பில்லியன் யூரோக்களுக்கான வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் ஜனாதிபதி மக்ரோன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
சர்வதேச முதலீட்டாளர்களை பிரான்சுக்கு அழைக்கும் இந்த மாநாடு எட்டாவது ஆண்டாக வரும் திங்கட்கிழமை இடம்பெற உள்ளது. ஐம்பது முதலீட்டாளர்களுக்கும் அதிகமானோர் இம்முறை பிரான்சில் முதலிட உள்ளதாகவும், அதன் மொத்த மதிப்பு €20 பில்லியன் யூரோக்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சென்ற ஆண்டு உலகம் முழுவதும் இருந்து 200 முதலீட்டாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அதன்போது €15 பில்லியன் யூரோக்கள் முதலீடு பெறப்பட்டிருந்தது.
இந்த எட்டு ஆண்டுகளில் பிரான்சில் இந்த மாநாடின் மூலம் 178 திட்டங்கள் பிரான்சில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன எனவும், இதனால் தொழில்வாய்ப்புகளும், வருவாயும், உள்ளூர் உற்பத்திக்கான மொத்த வருமானமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.