யூத எதிர்ப்பினால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்த பெண்ணுக்கு ஓராண்டு சிறை!!

16 வைகாசி 2025 வெள்ளி 17:42 | பார்வைகள் : 721
யூத எதிர்ப்பு தாக்குதலினால் பாதிக்கப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பரிசில் வசிக்கும் Nancy S எனும் 51 வயதுடைய பெண் 12 ஆம் வட்டார காவல்நிலையத்தில் பல்வேறு புகார்களை அளித்திருந்தார். யூத தாக்குதல்கள் அவர் மீது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பலமுறை புகார் அளித்திருந்தார்.
பின்னர் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் குறித்த பெண்ணும் அவரது மகளும் இணைந்து பல இடங்களில் யூத விரோத கருத்துக்களை பகிர்ந்தமையும், நாஸி சின்னங்களை வரைந்ததும் என பல குற்றங்களை அவர் செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.
கண்காணிப்பு கமராக்களில் அவர்களுடைய குற்றங்கள் பதிவாகியுள்ளன. அதனை ஆதாரமாக கொண்டு நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட, அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.