"பிள்ளைகளுக்கு அடிக்க கூடாது" என்ற சட்டம் இருந்தபோதிலும் கல்வி வன்முறை அதிகரிப்பு!

16 வைகாசி 2025 வெள்ளி 16:58 | பார்வைகள் : 1603
2019ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இயற்றப்பட்ட சட்டமானது பெற்றோர் அதிகாரம் "உடல் அல்லது உளவியல் வன்முறை இல்லாமல்" பயன்படுத்தப்பட வேண்டும் எனினும் கல்வி நோக்கில் கையாளப்படும் தண்டனை, அவமதிப்பு போன்ற வன்முறைகள் இன்னும் பிரான்சில் பரவலாக உள்ளன என குழந்தைகள் உரிமைக்காக போராடும் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
பல பெற்றோர்கள் இன்னும் பயம், வலி, கட்டாயம் ஆகியவற்றின் மூலம் குழந்தைகளை கீழ்ப்படிய வைக்கும் பழக்கத்தில் உள்ளனர்.
கணிப்புகளின்படி, 2024ல் 81% பெற்றோர் குறைந்தது ஒரு வகை கல்வி வன்முறையை பயன்படுத்தியுள்ளனர். அடித்தல், தள்ளுதல்,கன்னத்தில் அறைதல் போன்ற உடல் வன்முறைகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
பலர் இவற்றை வன்முறை என ஏற்கத் தொடங்கியுள்ளாலும், குழந்தைக்கு மேலாகக் கத்துவது வன்முறை என கருதுபவர்கள் குறைந்து வருகின்றனர்.
"இதை முழுமையாக மாற்றுவதும், கல்வி முறையில் புதிய மாற்றத்தை கொண்டு வருவதும் நமக்குச் சிரமமாக உள்ளது" என்று Fondation pour l’enfance நிறுவனத்தின் இயக்குநர் ஜொயல் சிகாமொயிஸ் (Joëlle Sicamois) தெரிவித்துள்ளார்.