Paristamil Navigation Paristamil advert login

பிரான்ஸ், ஈரானை எதிர்த்து பன்னாட்டு நீதிமன்றத்தில் புகார்!

பிரான்ஸ், ஈரானை எதிர்த்து பன்னாட்டு நீதிமன்றத்தில் புகார்!

16 வைகாசி 2025 வெள்ளி 19:10 | பார்வைகள் : 443


மூன்று ஆண்டுகளாக ஈரானில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பிரெஞ்சுப் பிரஜைகளிற்கான நீதிக்காக பிரான்ஸ் போராடி வருகின்றது.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஈரானில் கைது செய்யப்பட்டிருக்கும் இரண்டு பிரெஞ்சு குடியினரின் உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு, பிரான்ஸ் இன்று ஈரானை எதிர்த்து பன்னாட்டு நீதிமன்றத்தில் CIJ(Cour internationale de justice) அதிகாரபூர்வ புகார் தாக்கல் செய்துள்ளது.

செசீல் கோலர் மற்றும் ஜாக் பரிஸ் ஆகியோர் மூன்று வருட காலமாக, ஈரான் அரசாங்கத்தால் பெரும் துன்பங்களுடன், தூதரக தொடர்புகள் கூட மறுக்கப்பட்ட நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறிய வெளியுறவு அமைச்சர் ஜான்-நொயல் பரோ, இது மனித உரிமை மீறலுக்கும், பன்னாட்டு சட்டங்களை மீறலுக்கும் உட்பட்டது என கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூதரக பாதுகாப்பு என்பது பன்னாட்டு சட்டத்தில் உறுதியான உரிமையாகும். ஈரான், இந்த உரிமையை முற்றாக மீறியுள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது, என அவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

இந்த நடவடிக்கையை செசீல் கோலரின் சகோதரி 'முக்கிய நீதித்திறனிற்கான முன்னேற்றம் என தெரிவித்துள்ளார்.

நீதிக்காக போராடும் பிரான்ஸ்

இந்த புகார் தாக்கல் நேரம் மிகவும் முக்கியமானது. இன்று துருக்கியில் நடைபெறும் ஈரான் அணு ஒப்பந்த பேச்சுவார்த்தையில், பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஈரானை சந்திக்கவுள்ளனர். இந்த பின்னணியில், பிரான்சின் இந்த சட்ட நடவடிக்கை, ஈரானின் மீது அதிகமான அரசியல் அழுத்தத்தினை உருவாக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்