டொனால்ட் ட்ரம்பிடம் முறையிட்ட மக்ரோன்!! மொஸ்கோவிற்குத் தடை!

16 வைகாசி 2025 வெள்ளி 18:10 | பார்வைகள் : 581
«ரஸ்யாவின் பதில் இல்லாத நிலை ஏற்றுக்கொள்ள முடியாதது» என டொனால்ட் டிரம்பிடம் மக்ரோன் கண்டனம் தெரிவித்தார்
இன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் தொலைபேசி உரையாடலில், உக்ரைனின் விலொடிமிர் செலென்ஸ்கி, ஜேர்மனியின் பிரிட்ரிக் மெர்ஸ், பிரான்சின் எமானுவல் மக்ரோன், பிரித்தானியாவின் கியர் ஸ்டார்மர் மற்றும் அமெரிக்காவின் டொனால்ட் டஸ்க் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த உரையாடலில், பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன், ரஸ்யா, தற்காலிக போர்நிறுத்த கோரிக்கைக்கு பதில் அளிக்காததைக் கண்டித்ததாக கூறினார்.
«அமெரிக்கா, உக்ரைன் மற்றும் ஐரோப்பா சார்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு ரஸ்யா பதில் அளிக்காதது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தற்காலிக போர்நிறுத்தம் இல்லை, மற்றும் முக்கிய நிலைமையில் எந்த சந்திப்புக்களோ மாற்றங்களோ எதுவும் இல்லை» என மக்ரோன் வருத்தம் தெரிவித்தார்.
அல்பேனியாவில் இருந்து, ஐரோப்பிய தலைவர்கள் தற்போது அமெரிக்காவை ரஸ்யாவுக்கு எதிராக புதிய தடைகள் விதிக்க தூண்ட முயற்சித்து வருகின்றனர், இதன் மூலம் மொஸ்கோவின் மீது அழுத்தத்தை அதிகரிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.