
16 வைகாசி 2025 வெள்ளி 16:06 | பார்வைகள் : 545
லாபம் ஈட்டும் நிறுவனங்கள் ஆட்குறைப்புச் செய்யக்கூடாது!
பணிநீக்கங்களை தடை செய்ய வேண்டும் என CGT தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் சோஃபி பினே (SOPHIE BINET) கோரிக்கை விடுத்துள்ளார்
CGT தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் சோஃபி பினே, தொலைக்காட்சியில் பேசியபோது, தற்போது பணிநீக்க திட்டங்கள் வேகமாக அதிகரித்து வருவதாகவும், இது முந்தைய எச்சரிக்கைகளை நிரூபிப்பதாகவும் தெரிவித்தார்.
«பிரான்ஸில் 2025 முதல் காலாண்டில் வேலையிழந்தோர் வீதம் 7.4மூ ஆக உயர்ந்துள்ளது, என Insee தரவுகள் காட்டுகின்றன»
« குறையப் போவதில்லை. இது அதிகரிக்கப்போகிறது. ஏனெனில் பல்வேறு நிறுவனங்களில் பணிநீக்கங்கள் நடைபெற்று வருகின்றன» என பினே கூறினார்.
«ஓராண்டாகவே CGT எச்சரித்து வந்துள்ளது. ஆனால் அரசாங்கம் இந்த நிலையை மறுத்துக்கொண்டே இருக்கிறது. அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்க மறுக்கிறது» எனவும் கூறினார்.
அரசு உதவிகளை நிபந்தனைப்படுத்த வேண்டும்
«பணிநீக்கம் செய்கின்ற பெரும்பாலான நிறுவனங்கள், அரசு உதவிகளை பெற்றுள்ளன. அதிலும் சில பெரிய நிறுவனங்கள் லாபத்தில் உள்ளபோதிலும் பணிநீக்கங்களை மேற்கொள்கின்றன», என்று சோஃபி பினே குறிப்பிட்டார்.
«லாபம் ஈட்டும் நிறுவனங்களில் பணிநீக்கங்களை தடை செய்யலாம்» என்ற புதிய யோசனையையும் அவர் முன்வைத்தார். இது சமீபத்தில் செனட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு சட்ட யோசனையையும் ஒத்துள்ளது.