Paristamil Navigation Paristamil advert login

புடினுக்கு ஆதரவாக பரிசில் நடந்த பேரணியில் LFI நாடாளுமன்ற உறுப்பினர் கலந்துகொண்டாரா?

புடினுக்கு ஆதரவாக பரிசில் நடந்த பேரணியில்  LFI நாடாளுமன்ற உறுப்பினர் கலந்துகொண்டாரா?

16 வைகாசி 2025 வெள்ளி 14:27 | பார்வைகள் : 6389


பரிஸ் LFI நாடாளுமன்ற உறுப்பினர் சோபியா சிகிரூ (Sophia Chikirou) மே 8 ஆம் தேதி நடைபெற்ற நாசிசத்திற்கு எதிரான வெற்றி நினைவு நிகழ்வில் பங்கேற்றதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். 

அந்த நிகழ்வில் புடின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டதாகவும், அவர் புடின் ஆதரவு உரையை வழங்கியதாகவும் Le Canard enchaîné பத்திரிகை குறிப்பிட்டதை தொடர்ந்து, இந்நிகழ்வு புடின் ஆதரவுடன் தொடர்புடையது என சமூக வலைதளங்களிலும் விவாதங்கள் எழுந்துள்ளன.

இந்த குற்றச்சாட்டுகளை சோபியா சிகிரூ உறுதியாக மறுத்து, பத்திரிகையை கடுமையாக விமர்சித்துள்ளார். தன்னைப் பற்றி தவறான தகவலை வெளியிட்டதால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றும் எச்சரித்துள்ளார். மேலும் "நான் புடின் ஆதரவாளர்களுடன் செல்லவில்லை" என அவர் வலியுறுத்தியுள்ளார். இது தன்னைத் தாக்க முயலும் ஊடக சதி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மே 8ஆம் திகதி இரண்டு வெவ்வேறு பேரணிகள் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்