Paristamil Navigation Paristamil advert login

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 6.7 கிலோகிராம் தங்கத்துடன் இருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 6.7 கிலோகிராம் தங்கத்துடன் இருவர் கைது

16 வைகாசி 2025 வெள்ளி 14:12 | பார்வைகள் : 1483


 

சட்டவிரோதமாக இலங்கைக்கு 6.7 கிலோகிராம் தங்கத்தை கடத்திவர முயன்ற இருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான சந்தேகநபர்கள் 26 மற்றும் 46 வயதுடைய கிராண்ட்பாஸ் மற்றும் கண்டியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மொத்த பெறுமதி சுமார் 210 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் இருவரும், வணிகர்களின் தேவைகளின் அடிப்படையில், வெளிநாடுகளில் இருந்து பல்வேறு பொருட்களை விமானம் மூலம் இந்த நாட்டிற்கு கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்