Paristamil Navigation Paristamil advert login

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் -  பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி

16 வைகாசி 2025 வெள்ளி 08:12 | பார்வைகள் : 135


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது.

2023-25 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அவுஸ்திரேலியாவின் லார்ட்ஸ் மைதானத்தில், ஜூன் 11 தொடங்கி ஜூன் 15 வரை நடைபெறவுள்ளது.

இதில் நடப்பு சாம்பியனான அவுஸ்திரேலியாவும், தென்னாப்பிரிக்காவும் மோத உள்ளது.

இந்நிலையில், இதற்கான பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது.

இதில், கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.30.78 கோடியும், இறுதிப்போட்டியில் தோல்வியடையும் அணிக்கு ரூ.18.46 கோடியும் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொடரில் கலந்து கொண்ட அனைத்து அணிகளுக்கு, புள்ளிபட்டியளில் உள்ள தரவரிசை அடிப்படையில் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.

இதன்படி, 3வது இடம் பிடித்த இந்திய அணிக்கு ரூ.12.33 கோடியும், 4வது இடம் பிடித்த நியூசிலாந்து அணிக்கு ரூ.10.28 கோடியும், 5வது இடம் பிடித்த இங்கிலாந்து அணிக்கு ரூ.8.22 கோடியும் கிடைக்க உள்ளது.  

மேலும், 6வது இடம் பிடித்த இலங்கை அணிக்கு ரூ.7.19 கோடியும், 7வது இடம் பிடித்த வங்காளதேச அணிக்கு ரூ.6.17 கோடியும், 8வது இடம் பிடித்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ரூ.5.14 கோடியும், கடைசி இடம் பிடித்த பாகிஸ்தானுக்கு ரூ.4.11 கோடியும் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெல்லும் அணிக்கு அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகையை விட, இந்த முறை இரு மடங்கு அதிகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2019–2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நியூசிலாந்து அணியும், 2021–2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை அவுஸ்திரேலிய அணியும் வென்றது.    

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்