பாடசாலையில் “அல்லா அக்பர்’ என கத்திக்கொண்டு கொலை மிரட்டல்!!

16 வைகாசி 2025 வெள்ளி 08:00 | பார்வைகள் : 1286
ஆரம்ப பாடசாலை ஒன்றுக்குள் ரகசியமாக நுழைந்த நபர் ஒருவர், ‘அல்லா அக்பர்” என கத்திக்கொண்டு கொலை மிரட்டல் அச்சுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
பிரன்சின் தென் பகுதியான Tarbes ( Hautes-Pyrénées) நகரில் இச்சம்பவம் மே 15, நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. அங்குள்ள பாடசாலை ஒன்றுக்குள் காலை 7.30 மணி அளவில் ரகசியமாக நுழைந்த ஒருவர், பாடசாலையின் *ஆசிரியர் ஒருவருக்கு இந்த கொலை மிரட்டலை விடுத்துள்ளார். “அல்லா அக்பர் நான் உன் தலையை வெட்டிவிடுவேன்!” என அவர் கோஷமிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.