புதிய பாப்பரசருடன் உரையாடிய ஜனாதிபதி மக்ரோன்!!

16 வைகாசி 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 520
புதிய பாப்பரசராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பரிசுத்த பதின்நான்காம் லியோவுடன் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உரையாடியுள்ளார்.
தொலைபேசி வழியாக இந்த உரையாடல் நேற்று மே 15, வியாழக்கிழமை இடம்பெற்றது. முதலில் புதிய பாப்பரசராக தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டதாகவும், பின்னர் "உலகம் முழுவதும் என்ன தேவைக்காகவும் பயன்படுத்தப்படும் அனைத்து ஆயுதங்களையும் மெளனிக்கச் செய்யவேண்டும்! குறிப்பாக யுக்ரேனிலும் காஸாவிலும் நிலையான மற்றும் நீண்ட அமைதியை ஏற்படுத்தவேண்டும்" என அவர் கேட்டுக்கொண்டதாகவும் மக்ரோன் குறிப்பிட்டார்.
"உலகம் முழுவதும் உள்ள வறுமையை ஒழிக்கும் முயற்சிகள்" தொடர்பாகவும் நாம் கலந்துரையாடினோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.