பிரான்ஸ்ஐயும் மக்ரோனின் உச்சரிப்பையும் கேலி செய்த டிரம்ப்!

15 வைகாசி 2025 வியாழன் 23:23 | பார்வைகள் : 2529
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கட்டாரில் உள்ள அமெரிக்கப் படையினருக்கு உரையாற்றும் போது, பிரான்ஸின் மே 8 நினைவஞ்சலி நிகழ்வுகளை நையாண்டியாக விமர்சித்துள்ளார்.
மேலும் அவர், இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் முக்கிய பங்கை போதிய வகையில் மதிப்பளிக்கவில்லை என்றும், நம்மைத் தவிர, பிரான்சும், ரஷ்யாவும் வெற்றியை கொண்டாடுகிறார்கள், ஆனால் நாம்தான் உண்மையில் போரை வென்றோம் என்றும் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் உச்சரிப்பையும் கேலி செய்துள்ளார். மேலும் ஹிட்லர் ஃஈபிள் கோபுரத்தில் உரையாற்றினார் என்ற தவறான கூற்றினையும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தப் பேச்சு வரலாற்று உண்மைகளை திரிவுபடுத்துவதாகவும், "சோவியத் இராணுவம் செய்த சாதனைகளை டிரம்ப் முற்றிலும் மறந்துவிட்டார்"எனவும் வரலாற்றாளர்கள் விமர்சித்துள்ளனர்.
மேலும் பிரான்ஸ் வெளியுறவுத்துறை இது குறித்து எவ்விதக் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.