Évry : சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஒருவர் கைது!!

15 வைகாசி 2025 வியாழன் 19:55 | பார்வைகள் : 576
சிறுமி ஒருவரை இல்-து-பிரான்சின் பல்வேறு நகரங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
22 வயதுடைய இளைஞன் ஒருவர் Évry (Essonne) நகரில் மே 14 ஆம் திகதி நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டிருந்தார். அவர் 14 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தியுள்ளார். Épinay-sur-Orge, Savigny-sur-Orge மற்றும் பரிஸ் போன்ற நகரங்களில் குறித்த சிறுமி பாலியல் தொழிலுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மார்ச் 24 ஆம் திகதியில் இருந்து மே 3 ஆம் திகதிக்குட்பட்ட ஐந்து வாரங்களில் அவர் தொடர்ச்சியால பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். குறித்த நபர் அச்சிறுமிக்கு சமூலவலைத்தளமூடாக அறிமுகமானவர் எனவும், அதன் பின்னரே அச்சுறுத்தலின் பேரில் அவர் கட்டாயப்படுத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜூலை 11 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்கு அழைக்கப்பட உள்ளார்.