இம்ரான்கான் மகன்கள் அமெரிக்க அதிபரிடம் விடுத்துள்ள கோரிக்கை
15 வைகாசி 2025 வியாழன் 18:48 | பார்வைகள் : 6591
தங்கள் தந்தைக்கு மரண ஆபத்தில் இருப்பதாகவும், அவரை காப்பாற்றுமாறும் இம்ரான் கானின் மகன்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சித் தலைவருமான இம்ரான் கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டுக் கடந்த 2023 முதல் சிறையில் உள்ளார்.
கடந்த ஜனவரியில் அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
லண்டனில் வசிக்கும், இம்ரானின் மகன்கள் சுலைமான் கான் மற்றும் காசிம் ஒரு நேர்காணலில் பங்கேற்று பேசும்போது, தங்கள் தந்தையை விடுவிக்க டிரம்பிடம் கேட்போம் என்று கூறினர்.
தங்கள் தந்தை குறைந்தபட்ச உரிமைகள் கூட இல்லமால் இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
இம்ரான் கான் சிறைச் சூழல் குறித்து பேசிய அவர்கள்,
அவர் ஒரு மரண அறையில் இருக்கிறார், வெளிச்சம் இல்லை, வழக்கறிஞர் இல்லை, மருத்துவர் இல்லை, இருப்பினும் அவர் உடைந்து போகவில்லை என்று தெரிவித்தனர்.
அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஆராய்ந்தால், அவை அரசியல் நோக்கம் கொண்டவை என்பது தெளிவாகும்.
ஜனநாயகத்தையும் பேச்சு சுதந்திரத்தையும் ஆதரிக்கும் எந்தவொரு அரசாங்கமும் எங்கள் தந்தையை விடுவிக்க ஆதரிக்கும். குறிப்பாக உலகின் மிகவும் பிரபலமான தலைவரான டிரம்ப்பின் உதவியை நாடுவோம் என்றும் இம்ரான்கான் மகன்கள் கூறியுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan