பிரான்ஸ் - சீனா உறவுகளை பாதித்துள்ள வணிகச்சூழல்!

15 வைகாசி 2025 வியாழன் 18:27 | பார்வைகள் : 541
சீனாவின் துணை பிரதமர் ஹெ லிஃபெங் (He Lifeng), பரிஸ் பயணத்தின் போது, பிரான்ஸ் நியாயமான மற்றும் சமமான வணிக சூழலை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இது, சீனாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையே சில பொருளாதார மோதல்களுக்குப் பிறகு நிகழ்ந்துள்ளது.
நவம்பர் நடுப்பகுதியில் இருந்து ஐரோப்பிய மதுபான இறக்குமதியாளர்கள் மீது தற்காலிக பொருள் குவிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, கோன்யாக் (cognac) ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்பட்டு பிரான்ஸ்க்கு மாதந்தோறும் 50 மில்லியன் யூரோக்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேசமயம், சீனாவின் la fièvre catarrhale ovine(FCO) நோயை காரணமாக காட்டி 2024 இறுதியில் இருந்து பிரான்சும் சீனாவிற்கு மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு தடைவிதித்துள்ளது.
FCO என்பது மனிதர்களுக்குப் பரவாத முக்கியமாக ஆடுகளை தாக்குகின்ற மற்றும் கால்நடைகளையும் பாதிக்கின்ற நோயாகும்.
இந்நிலையில் சீனா, பிரான்ஸ் நிறுவனங்களை சீனாவில் முதலீடு செய்ய அழைத்துள்ளது. அதேபோல், சீன நிறுவனங்களும் பிரான்ஸில் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படுகின்றன.
பிரான்ஸ் மாட்டிறைச்சி சீன சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றாலும், தற்போதைய தடையை எப்போது நீக்கப்போகிறார்கள் என்பதை பற்றி எதுவும் தெரிவிக்கபடவில்லை.