மதத்தின் அடிப்படையில் தவறான கண்டனம்: பெண்ணுக்கு சிறைத் தண்டனை!

15 வைகாசி 2025 வியாழன் 15:38 | பார்வைகள் : 684
2024 ஆம் ஆண்டின் இறுதியில் யூத எதிர்ப்பு குறிச்சொற்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு ஆளானதாக அறிவித்த பின்னர், மதத்தின் அடிப்படையில் தவறான கண்டனம் மற்றும் இழிவுபடுத்தியதற்காக , பரிஸ் நீதிமன்றத்தால் புதன்கிழமை, மே 14 அன்று ஒரு பெண்ணுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Nancy S என்ற பெண் கடந்த 2024ல், தான் யூத எதிர்ப்பு மற்றும் மிரட்டல்களுக்கு இலக்காகியதாக பல முறை புகார் அளித்திருந்தார். ஆனால் விசாரணையில், அந்த கிறுக்கல்களை எழுதியதும், தனது மகளுடன் சேர்ந்து லிஃப்ட் மற்றும் சுவர்களில் சேதம் விளைவித்ததும் அவரே என கேமரா பதிவுகளில் உறுதி செய்யப்பட்டது.
மேலும், யூத விரோத கடிதத்துக்குப் பயன்படுத்தப்பட்ட அஞ்சல் முத்திரையையும் அவரே வாங்கியதாக வங்கிப் பதிவுகள் மூலம் கண்டறியப்பட்டது. நீதிமன்றம், அவருக்கு உளவியல் சிகிச்சைக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு செல்லத் தடை விதித்தும் தீர்ப்பு வழங்கியுள்ளது.