Essonne : 40 கிலோ கொக்கைனுடன் பெண் கைது!!

15 வைகாசி 2025 வியாழன் 14:21 | பார்வைகள் : 649
40 கிலோ எடையுள்ள கொக்கைன் போதைப்பொருளுடன் வாடகை மகிழுந்தில் பயணித்த பெண் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மே 8, வியாழக்கிழமை இக்கைது சம்பவம் Grigny (Essonne) நகரில் இடம்பெற்றுள்ளது. VTC வாடகை மகிழுந்து ஒன்றை தடுத்து நிறுத்து சோதனையிட்ட காவல்துறையினர், அதில் பயணத்த பெண்ணை விசாரித்ததில் அவர் சில முரணான தகவல்களை தெரிவித்தார். அதை அடுத்து சந்தேகம் கொண்ட காவல்துறையினர் அவரது பயணப்பெட்டியை சோதனையிட்டனர்.
அதன்போது பெட்டிக்குள் 40 கிலோ வரை எடைகொண்ட கொக்கைன் போதைப்பொருள் மறைத்து எடுத்துச் செல்லுவதை கண்டுபிடித்தனர்.
உடனடியாக அப்பெண் கைது செய்யப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட கொக்கைனின் மதிப்பு 2 முதல் 3 மில்லியன் யூரோக்கள் என தெரிவிக்கப்படுகிறது.