திருகோணமலையில் கைகலப்பு - கழுத்து வெட்டப்பட்ட நிலையில் மாணவர் வைத்தியசாலையில்
15 வைகாசி 2025 வியாழன் 12:24 | பார்வைகள் : 4224
திருகோணமலை, புல்மோட்டையில் இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பின்போது ஒரு மாணவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த மாணவன் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் திருகோணமலை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புல்மோட்டையில் உள்ள பாடசாலை ஒன்றில் சாதாரண தரத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கிடையே இன்று காலை பாடசாலையில் வைத்து கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரு மாணவர் இன்னுமொரு மாணவர் மீது கூரிய ஆயுதத்தைக் கொண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இதன்போது குறித்த மாணவரின் கழுத்துப் பகுதியில் பாரிய வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில் அவர் புல்மோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan