Seine-et-Marne : கனரக வாகனம் மோதி - வீதிப்பணியாளர் பலி!!
15 வைகாசி 2025 வியாழன் 08:00 | பார்வைகள் : 4765
கனரக வாகனம் ஒன்று மோதி விபத்தை ஏற்படுத்தியதில் வீதிப்பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
Mesnil-Amelot (Seine-et-Marne) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மே 14, நேற்று புதன்கிழமை மாலை 4 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. இல்-து-பிரான்சுக்கான வீதி பாதுகாப்பு அதிகாரசபை (Direction interdépartementale des routes d'Île-de-France - DIRIF) ஊழியர் இருவர் RN 104 சாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த போது அவர்கள் மீது கனரக வாகனம் ஒன்று மோதியுள்ளது.
இதில் இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களில் ஒருவர் சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார். இரண்டாவது நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan