யோர்க் பகுதியில் இடம்பெற்ற விபத்து - 25 வயது இளைஞர் உயிரிழப்பு

15 வைகாசி 2025 வியாழன் 05:52 | பார்வைகள் : 198
யோர்க் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல், லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் இடையிலான விபத்தில் வாகன் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் உயிரிழந்தார் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விபத்து மாலை 3:40 மணியளவில், King Road மற்றும் 10th Concession Road அருகே இடம்பெற்றது.
இரண்டு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல் வந்ததும், பொலிசார் விரைந்து சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.
போலீசார் சம்பவ இடத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை கண்டனர். அவர் வாகன் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
விபத்தில் ஈடுபட்ட லாரியின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இருந்தார் என்றும், அவருக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த விபத்துக்கான சாட்சிகள் அல்லது டாஷ் கேம் (Dashcam) வீடியோ வைத்திருப்பவர்கள் யோர்க் பொலிசாரை உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.