பரிசில் இருந்து வெளியேற்றப்பட்ட 200 அகதிகள்!!

15 வைகாசி 2025 வியாழன் 07:00 | பார்வைகள் : 2022
பரிசில் இருந்து 200 அகதிகள் நேற்று புதன்கிழமை காலை வெளியேற்றப்பட்டனர்.
19 ஆம் வட்டாரத்தின் Boulevard de la Villette பகுதியில் உள்ள மெற்றோ பாலத்துக்கு கீழே சிறிய கூடாரங்களில் தங்கியிருந்த 200 வரையான அகதிகள் மே 14, புதன்கிழமை காலை வெளியேற்றப்பட்டிருந்தனர். காவல்துறையினரும் பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் இணைந்து அகதிகளை வெளியேற்றியிருந்தனர். அவர்கள் பாதுகாப்பாக பேருந்துகளில் ஏற்றப்பட்டு இல்-து-பிரான்சின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
3 பிரிவு CRS காவல்துறையினரும், France terre d’asile, Médecins du monde, Utopia 56 மற்றும் Tendre la main ஆகிய தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் இணைந்து இந்த வெளியேற்றத்தை மேற்கொண்டனர். அகதிகளுக்கு தேவையான பொருட்களை தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் வழங்கினார்கள்.