LIDL : தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு!

14 வைகாசி 2025 புதன் 22:50 | பார்வைகள் : 679
LIDL நிறுவனத்தின் தொழிற்சங்கங்கள் (CFTC-CGT-CFDT-FO) , மே 14, 2025 வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்த போராட்டம் பணிச்சுமை மற்றும் சம்பள உயர்வை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படுகிறது. தொழிலாளர்களின் கடுமையான வேலைச்சுமைக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படவில்லை போன்ற குறைகளை தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ளன.
தொழிற்சங்கங்கள், LIDL நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையைக் கோரி மற்றும் தொழிலாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென வலியுறுத்துகின்றன.
இந்த வேலைநிறுத்தம் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை மீட்கவும் மேலும் நிறுவன மேலாண்மையின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடும் வகையிலும் பார்க்கப்படுகிறது.