Paristamil Navigation Paristamil advert login

கலே : வாகனத்துக்குள் சிக்குண்டு அகதி பலி!!

கலே : வாகனத்துக்குள் சிக்குண்டு அகதி பலி!!

14 வைகாசி 2025 புதன் 19:09 | பார்வைகள் : 596


கனரக வாகனம் ஒன்றில் ஏற முற்பட்ட அகதி ஒருவர், அதே வாகனத்துக்குள் சிக்குண்டு உடல் நசுங்கி பலியாகியுள்ளார்.

பா-து-கலே (Pas-de-Calais) மாவட்டத்தின் Marck எனும் நகர்ப்பகுதியில் இச்சம்பவம் மே 13, நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. எப்பாடு பட்டேனும் பிரித்தானியா சென்றடையவேண்டும் எனும் முனைப்புடன் கலே மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான அகதிகள் உள்ளனர். அவர்களில் பலர் படகுப்பயணம் மேற்கொள்ள, ஒரு சில அகதிகள் வாகனங்களில் ரகசியமாக ஏறி பிரித்தானியாவுக்குச் செல்ல முற்படுகின்றனர்.

பலர் மரங்களில் ஏறி இருந்து வாகனம் மீது குதித்து, அது தவறாகி உயிரிழந்த சம்பவங்கள் கூட பதிவாகியுள்ளன.

அதேபோன்று நேற்று ஒருவர் ஓடிக்கொண்டிருக்கும் கனரக வாகனம் மீது பாய்ந்து ஏற முற்பட்ட வேளையில், அவர் தவறி விழுந்து வாகனத்தின் சக்கரங்களுக்குள் சிக்கி, சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். அவர் எரிட்டேரியா நாட்டைச் சேர்ந்த அகதி என தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டில் ஆபத்தான கடற்பயணங்களினால் மட்டும் 78 அகதிகள் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்