500 சதவீதம் சுங்க வரி திட்டம்: ரஷியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள்!

14 வைகாசி 2025 புதன் 15:39 | பார்வைகள் : 1010
உக்ரைனில் போர் தொடரும் நிலையில், ரஷியாவுக்கு எதிராக பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் புதிய கடுமையான தீர்மானங்களை இன்று எடுத்துள்ளன.
ரஷிய எண்ணெய் மற்றும் எரிபொருள் ஏற்றுமதியை கட்டுப்படுத்த 500 சதவீதம் சுங்க வரி விதிக்கப்படும் என்று பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஜோன்-நொயல் பரோ (Jean-Noël Barrot) கூறியுள்ளார்.
இத்தகைய தீர்மானம், ரஷிய எரிசக்தியில் மிகுந்த நம்பிக்கையுள்ள நாடுகளை பாதிக்கும் அபாயம் உள்ளது. மேலும், ரஷியாவுக்கு எதிரான தீர்மானங்களை எடுக்க உதவியுள்ள ஆசிய நிதி நிறுவனங்களே தற்போதைய இலக்காகியுள்ளன.
மேலும், ஐரோப்பாவில் முடக்கப்பட்டுள்ள ரஷிய சொத்துகளை பயன்படுத்துவது குறித்த விவாதமும் மீண்டும் எழுந்துள்ளது. சில நாடுகள் அதனை உக்ரைனுக்கு உதவும் நோக்கில் பயன்படுத்த முன்வரும் பொழுது, சட்ட பிணைப்புகள் மற்றும் சர்வதேச விதிகளால் அது சிக்கலாக உள்ளது. ஆனால், தற்போதைக்கு அந்த சொத்துகளால் கிடைக்கும் வட்டிகள் மட்டுமே உக்ரைனுக்கு உதவ பயன்படுத்தப்படுகின்றன.