ஜூலை 5 முதல்.. சென் நதியில் நீந்தலாம்.. !!

14 வைகாசி 2025 புதன் 12:42 | பார்வைகள் : 553
எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி முதல் சென் நதியில் அமைப்பட்டுள்ள நீச்சல் பகுதிகளில் பொதுமக்கள் நீந்தமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளின் போது சென் நதியில் நீச்சல் தடாகங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அன்றைய வருடமே (2024) போட்டிகளின் பின்னரும் பொது மக்களுக்கு நீச்சலுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கடந்த 100 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த இந்த தடை நீக்கப்பட்டு, மீண்டும் நீச்சலுக்கு அனுமதிக்கப்பட்டது.
ஜூலை 5 ஆம் திகதி திறக்கப்படும் இந்த நீச்சல் பகுதிகள் எதிர்வரும் ஓகஸ்ட் 31 ஆம் திகதி வரை திறக்கப்படும் என பரிஸ் நகரசபை அறிவித்துள்ளது.
மத்திய பரிசில் Marie Arm பகுதியிலும், 15 ஆம் வட்டாரத்தில் Port de Grenelle பகுதியிலும், 12 ஆம் வட்டாரத்தில் Bercy பகுதியிலும் நீச்சல் பகுதிகள் திறக்கப்பட உள்ளன.