Paristamil Navigation Paristamil advert login

ஆரம்ப வீரருகக்காக அலைமோதும் அவுஸ்திரேலியா -12 போட்டிகளில் 5 ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள்?

ஆரம்ப வீரருகக்காக அலைமோதும் அவுஸ்திரேலியா -12 போட்டிகளில் 5 ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள்?

14 வைகாசி 2025 புதன் 12:12 | பார்வைகள் : 148


உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் நெருங்கிக்கொண்டிருக்கின்ற நிலையில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரருக்கான அவுஸ்திரேலியாவின் அலைமோதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கு முன்பதாக கடைசியாக நடைபெற்ற 11 டெஸ்ட் போட்டிகளில் ஒருவர் மாத்திரமே நிரந்தர ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக விளையாடியுள்ளார்.

அவரது ஜோடியாக நான்கு வீரர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆரம்ப வீரராக ஐந்தாவது வீரர் ஒருவர் பயன்படுத்தப்படலாம் என்ற கருத்தும் வலுக்கத் தொடங்கியுள்ளது.

டேவிட் வோர்னர் கடந்த வருடம் ஜனவரி மாதம் ஓய்வு பெற்ற பின்னர் உஸ்மான் கவாஜாவின் ஆரம்ப ஜோடியினராக நால்வர் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

முன்னாள் அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித், நேதன் மெக்ஸ்வீனி, சாம் கொன்ஸ்டாஸ், ட்ரவிஸ் ஹெட் ஆகிய நால்வர் கடந்த 11 டெஸ்ட் போட்டிகளில் உஸ்மான் கவாஜாவின் ஆரம்பத் துடப்பாட்ட ஜோடியாக விளையாடியுள்ளனர்.

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் உஸ்மானின் ஐந்தாவது ஆரம்ப ஜோடியாக மானஸ் லபுஷேன் துடுப்பெடுத்தாடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்பத் துடுப்பாட்டம் என்பது சிறப்புவாய்ந்த ஒருவருக்கு உரிய பாத்திரமாக அமைந்துவிடாது என்ற கருத்தை தேசிய தேர்வாளர் ஜோர்ஜ் பெய்லி வெளியிட்டுள்ளார்.
'ஆரம்ப வீரர் ஸ்தானத்தை ஜொஷ் இங்லிஸாலும் நிரப்பமுடியும்.

அதேவேளை, மானஸாலும் நிரப்ப முடியும் என்பதை நான் கூறியிருந்தேன்' என 15 வீரர்கள் அடங்கிய குழாத்தை உறுதிசெய்த பின்னர் பெய்லி தெரிவித்தார்.

இரண்டாவது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அத்தியாயத்திற்கான இறுதிப் போட்டியில் (லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் 2023 ஜூன் 7ஆம் திகதியிலிருந்து 11ஆம் திகதிவரை) இந்தியாவை எதிர்த்தாடிய அவுஸ்திரேலியா 209 ஓட்டங்களால் வெற்றியீட்டி சம்பியனாகி இருந்தது.

இரண்டாவது தடவையாகவும் சம்பியனாகும் குறிக்கோளுடன் அவுஸ்திரேலியா பலம்வாயந்த குழாத்தை அறிவித்துள்ளது. இந்தக் குழாத்தில் இடம்பெறும் அதே வீரர்கள், 2023 - 2025 WTC சுழற்சியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கும் பெயரிடப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய குழாம் 
பெட் கமின்ஸ் (தலைவர்), ஸ்கொட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கெமரன் க்றீன், ஜொஷ் ஹேஸ்ல்வூட், ட்ரவிஸ் ஹெட், ஜொஷ் இங்லிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கொன்ஸ்டாஸ், மெட் குனேமான், மானஸ் லபுஷேன், நேதன் லயன், ஸ்டீவன் ஸ்மித், மிச்செல் ஸ்டார்க், போ வெப்ஸ்டர்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்