முகமட் அம்ரா : உயிர்நீத்த காவல்துறையினருக்கு அஞ்சலி.. ஜனாதிபதி நேரில் செல்கிறார்...!!

14 வைகாசி 2025 புதன் 10:00 | பார்வைகள் : 443
போதைப்பொருள் கடத்தல் குற்றவாளியான முகமட் அம்ரா தாக்குதல் மேற்கொண்டு தப்பிச் சென்றிருந்த சம்பவத்தில் இருந்து காவல்துறையினர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனனர்.
சென்றவருடம் மே 14 அன்று இடம்பெற்ற இந்த தாக்குதலின் முதலாவது ஆண்டு நினைவுநாள் இன்று புதன்கிழமை Caen நகரில் அனுஷ்டிக்கப்பட உள்ளது. அங்குள்ள Incarville சுங்கச்சாவடியில் வைத்து சிறைச்சாலை வாகனத்தை தாக்கி, ஆயுத்தாரிகள் சில முகமட் அம்ராவை தப்பிச் செல்ல வைத்திருந்தனர். இச்சம்பவத்தில் இரு காவல்துறையினர் கொல்லப்பட்டிருந்தனர்.
கொல்லப்பட்ட காவல்துறையினருக்கு அப்பகுதியில் நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்பட்டு இன்று புதன்கிழமை காலை 10.15 மணிக்கு இந்த நினைவுத்தூபி திறந்துவைக்கப்பட உள்ளது. மக்ரோன் நண்பகல் 12.50 மணி அளவில் Caen நகருக்கு பயணம் மேற்கொண்டு உயிர்நீத்த காவல்துறையினரின் குடும்பத்தினரைச் சந்திக்க உள்ளதாக எலிசே தெரிவித்துள்ளது.
அத்தோடு, இன்று மாலை ஜனாதிபதி மக்ரோன் பா-து-கலே நகருக்கும் விஜயம் மேற்கொள்ள உள்ளார்.