Paristamil Navigation Paristamil advert login

இந்திய துாதர் ராவத்துடன் சீன அதிகாரி லியு சந்திப்பு

இந்திய துாதர் ராவத்துடன் சீன அதிகாரி லியு சந்திப்பு

14 வைகாசி 2025 புதன் 05:55 | பார்வைகள் : 180


இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் குறைந்து அமைதி நிலவும் நேரத்தில், சீனாவுக்கான வெளியுறவுத்துறை அதிகாரி லியு ஜின்சாங் நேற்று சீனாவுக்கான இந்திய துாதர் பிரதீப்குமார் ராவத்தை சந்தித்து பேசினார்.

சீன வெளியுறவுத்துறையின் ஆசிய விவகாரங்களுக்கான பொறுப்பாளர் லியு ஜின்சாங், பீஜிங்கில் உள்ள இந்திய துாதர் அலுவலகம் சென்று, சீனாவுக்கான இந்திய துாதர் பிரதீப்குமார் ராவத்தை நேற்று சந்தித்துப் பேசினார்.

இரு தரப்பு சந்திப்பு குறித்து, பின் வெளியிடப்பட்ட அறிக்கை:

இரு தரப்பு விவகாரங்கள் மற்றும் இரு நாடுகளுக்கும் பொதுவான விவகாரங்கள் குறித்து, இந்த சந்திப்பின் போது கருத்துகள் பரிமாறப்பட்டன. இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிறுத்தத்தை தான் சர்வதேச நாடுகள் காண விரும்பின. இந்த பகுதியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை சீனா வரவேற்கிறது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்படும் பிரச்னைகள், குழப்பங்களை பேச்சு மூலம் தீர்க்க வேண்டிய வழிமுறைகளை இரு நாடுகளும் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். இந்த பிராந்தியத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவ தேவையான ஒத்துழைப்பை சீனா எப்போதும் வழங்கும். அதற்கான பணியில் சீனா ஈடுபட தயாராக உள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்