டூரிஸ்ட் பேமிலி இயக்குனரின் அடுத்த படத்தில் தனுஷ் ?
13 வைகாசி 2025 செவ்வாய் 17:29 | பார்வைகள் : 4152
சமீபத்தில் வெளியான "டூரிஸ்ட் பேமிலி" என்ற திரைப்படம், மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது என்பதும், சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்துள்ள இந்தப் படம் பார்வையாளர்களை கட்டிப்போட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில், மே 1ஆம் தேதி வெளியான படங்களில் மிகப்பெரிய வெற்றிப் படமாக "டூரிஸ்ட் பேமிலி" உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தை அபிஷன் ஜீவ்னித் என்பவர் இயக்கியுள்ளார். அறிமுக இயக்குனராக இருந்தாலும், முதல் படத்திலேயே அவர் தனது முத்திரையை பதித்து, கோலிவுட் திரை உலகையே திரும்பிப் பார்க்க வைத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு இயக்குனர் முதல் படத்தில் வெற்றி பெற்றுவிட்டால், அவரது அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கும் என்பது வழக்கம். தற்போது, அபிஷன் ஜீவ்னித் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சமீபத்தில் "டூரிஸ்ட் பேமிலி" படத்தை பார்த்த தனுஷ், இயக்குனரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாகவும், இருவரும் இணைந்து ஒரு படம் செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, விரைவில் தனுஷ் நடிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குனர் அபிஷன் ஜீவ்னித் இயக்கும் புதிய படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan