ரொனால்டோ, மெஸ்ஸி இல்லை! உலகின் சிறந்த வீரர்கள் இவர்கள்தான் - ஷாக் கொடுத்த தலைமை பயிற்சியாளர்

13 வைகாசி 2025 செவ்வாய் 10:42 | பார்வைகள் : 127
அர்ஜென்டினாவின் தலைமை பயிற்சியாளர் உலகின் சிறந்த கால்பந்து வீரர்கள் பட்டியலில் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸியை தவிர்த்தது பேசுபொருளாகியுள்ளது.
கால்பந்து உலகில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) மற்றும் Lionel Messi) ஆகிய இரு ஜாம்பவான்களும், தங்களில் சிறந்த வீரர் என்ற விவாதத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
ஆனால், தற்போது இருவரும் தங்களது தொழில் வாழ்க்கையில் இறுதியில் உள்ளதால், புதிய பெயர்கள் மையமாக எடுக்கத் தொடங்கியுள்ளன.
அவர், "கைலியன் எம்பாப்பே, லாமைன் யமல் மற்றும் மூன்றாவது நபர் எங்களில் ஒருவராக இருக்கலாம். அது ஜூலியன் அல்வாரெஸ் அல்லது லௌடாரோ மார்டினெஸாக இருக்கலாம்" என்றார்.
முதல் இரண்டு வீரர்களை அவர் விரைவாக கூறிவிட்டார். ஆனால் மூன்றாவது வீரரை இறுதி செய்வது, அவருக்கு மிகவும் கடினமாக தோன்றியது.
உலகின் சிறந்த மூன்று வீரர்களின் பெயர்களைக் கூறுமாறு கேட்ட கேள்விக்கே ஸ்கலோனி இந்த பதிலைக் கொடுத்தார்.