Paristamil Navigation Paristamil advert login

போர் நிறுத்தத்தை மீறி இன்று ட்ரோன் ஏவிய பாகிஸ்தான்; சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்

போர் நிறுத்தத்தை மீறி இன்று ட்ரோன் ஏவிய பாகிஸ்தான்; சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்

12 வைகாசி 2025 திங்கள் 18:56 | பார்வைகள் : 169


போர் நிறுத்தத்தை மீறி, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சம்பாவில் இன்று இரவு பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

பஹல்காம் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானிய பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது.

இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே மூன்று நாட்களாக எல்லையில் மோதல் நீடித்தது.

இந்திய ராணுவத்தின் அதிரடி தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாத பாகிஸ்தான் ராணுவம், போர் நிறுத்தம் செய்ய வேண்டுகோள் விடுத்தது. அதை இந்தியா ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று இரவு ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சம்பாவில் மின் தடை நிலவிய நேரத்தில் பாகிஸ்தான் ட்ரோன்களை ஏவியது. அதற்கு உடனடியாக இந்திய ராணுவம் அதற்கு தக்க பதிலடி தந்து அழித்துவிட்டது.

போர் நிறுத்தத்தை மீறி மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் ஏவியதற்கு இந்திய ராணுவம் கடுமையான பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்