சாலை கண்காணிப்புகள் 1- காவல்துறையினர் எங்கே வேண்டுமானாலும் மறைவாக நிற்க முடியுமா?

12 வைகாசி 2025 திங்கள் 14:58 | பார்வைகள் : 681
ஜோந்தார்மரி அல்லது காவல்துறையினர், ராடார் கண்காணிப்பு அல்லது வழக்கமான சோதனை என எதுவாக இருந்தாலும், காவல்துறையினர் எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சோதனை செய்ய உரிமையுள்ளவர்களா? அவர்கள் தெளிவாக மறைந்துகொண்டு இருக்கலாமா?
இந்தக் கேள்விகளுக்கு, வாகன சட்டத் துறையின் வல்லுநரான ஜோன் பப்திஸ்த் லு தால் (Maître Jean-Baptiste Le Dall) விளக்கமளித்துள்ளார்.
காவல்துறையினர் எங்கே வேண்டுமானாலும் நிற்கலாமா?
இதற்கு எதிராக எந்தத் தடையும் இல்லை. ஜோந்தார்மரி அல்லது காவல்துறையினர், தங்களுக்குப் பிடித்த இடத்தில் நிற்கும் சுதந்திரம் உண்டு.
சாலையோரம், ஒரு பாலத்தில், சுங்கச் சாவடியில் என எங்கும் அவர்கள் நிற்க முடியும்
அவர்கள் தூர நோக்கக் கருவி (jumelles) மூலம் அல்லது வேகக் கண்காணிப்பு கருவியை (radar) பொருத்தி, நீங்கள் வேகக் கட்டுப்பாட்டை மீறுகிறீர்களா என்பதை பார்வையிடலாம்
என்கிறார் சட்டத்தரணி
இவர் இன்னும் பல போக்குவரத்துச் சட்டங்களிற்கு அவர் பதிலளிக்க உள்ளார்.