அல்ஜீரியாவின் கடும் நடவடிக்கை : பிரான்ஸ் "உடனடி பதிலடி" கொடுக்கும் என எச்சரிக்கை!

12 வைகாசி 2025 திங்கள் 14:22 | பார்வைகள் : 581
பிரான்ஸ் மற்றும் அல்ஜீரியா இடையே பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. அல்ஜீரிய அரசு, தற்காலிக பணிக்கு வந்த சில பிரெஞ்சு அதிகாரிகளை நாடு கடத்தும் முடிவை அறிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை வெளியான தகவலின்படி, பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜான்-நொயல் பாரோ (Jean-Noël Barrot) இந்த முடிவு குறித்து, "இது புரியாததும், கடுமையானதும்" என்றும், பிரான்ஸ் இதற்கு "உடனடியாகவும் உறுதியான முறையிலும் மற்றும் விகிதாசார அடிப்படையிலும் " பதிலளிக்கும் என்றும் கூறியுள்ளார்.
அல்ஜீரிய ஊடகத்தின் தகவலின்படி, பிரான்ஸ் தனது தூதரக ஊழியர்களை நியமிக்கும் போது விதிகளை மீறியுள்ளது.
அதிகாரப்பூர்வ ஒப்புதல் மற்றும் அறிவிப்புகள் இல்லாமல் ஊழியர்கள் நியமனங்கள் செய்யப்பட்டுள்ளனர் என்பதே அல்ஜீரியாவின் குற்றச்சாட்டு. எனவே, "சட்ட விரோதமான முறையில்" நியமிக்கப்பட்ட அனைத்து பிரெஞ்சு ஊழியர்களும் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்று அல்ஜீரியா கோரியுள்ளது.