ஒரு பொது வாக்கெடுப்பிற்கு ஆகும் செலவு என்ன?

12 வைகாசி 2025 திங்கள் 12:08 | பார்வைகள் : 522
அண்மையில் உள்துறை அமைச்சர் புரூனோ ரத்தையோ குடியேற்றவாதிகள் தொடர்பாக தேசிய வாக்கெடுப்பு (RÉFÉRENDUM) ஒன்றை நடாத்துவதற்கான முயற்சிகளை எடுக்கப்போவதாகத் தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போது ஒரு பொது வாக்கெடுப்பு நடாத்துவது என்றால் அதற்காக ஆகும் செலவீனங்கள் பற்றி பொருளாதார நிபுணர்களும், பொதுமக்கள் கணக்கு நிதியமும் விளக்கம் தந்துள்ளன.
தற்போதைய நிலையில் ஒரு பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு ஆகக் குறைந்தது 200 மில்லியன் யுரோக்கள் செலசாகும் எனவும் அதற்கான வாக்குச் சீட்டுகளிற்கு மட்டும் 100 மில்லியன் யூரோக்கள் செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் இலத்திரனியல் வாக்கெடுப்பு செய்வதானாலும் கூட 100 மில்லியன் யூரோக்களிற்குக் குறைவாக ஒன்றுத் செய்ய இயலாது.
பிரான்சில் கடைசியாக தேசிய வாக்கெடுப்பு மே 29, 2005 அன்று நடைபெற்றது. இது ஐரோப்பாவிற்கான அரசியலமைப்பை நிறுவும் ஒப்பந்தத்தை அங்கீகரிப்பது தொடர்பானது.
தேசிய சட்டமன்றத்தின் தரவுகளின்படி, இதன் மொத்த செலவு 130.6 மில்லியன் யூரோக்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பெரும் பகுதி வாக்காளர்களுக்கு ஆவணங்களை அஞ்சல் செய்வதற்காகவும் (58.8 மில்லியன் யூரோக்கள்) ஆவணங்களை அச்சிடுவதற்காவும் (35.8 மில்லியன் யூரோக்கள்) செலவிடப்பட்டது என்பது குறிப்பித்தக்கது.
இது தற்போதைய பண வீக்கத்தில் 300 மில்லியன் யூரோக்களிற்கும் அதிகமானது.