காயமடைந்துள்ள ரஜத் படிதார் - RCBயின் புதிய அணித்தலைவர் யார்?

12 வைகாசி 2025 திங்கள் 12:27 | பார்வைகள் : 118
ஐபிஎல் தொடரில் இதுவரை ஒரு முறை கூட கோப்பை வெல்லாத அணிகளில் ஒன்றான RCB அணி, இந்த முறை சிறப்பாக விளையாடி, புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.
அதேவேளையில், அணியின் முக்கிய வீரர்கள் பலர் காயம் காரணமாக விலகுவது, அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அணியின் முக்கிய துடுப்பாட்டக்காரரான தேவ்தத் படிக்கல், காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதால், அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும், வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட், தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வருவதால் அவரும் தொடரில் இருந்து விலகும் முடிவில் உள்ளதாக கூறப்படுகிறது.
அவுஸ்திரேலிய வீரரான ஜோஷ் ஹேசில்வுட், அடுத்த மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட உள்ளதால், அதற்கு முன் காயத்தில் இருந்து மீள்வதற்காக இந்த முடிவை எடுப்பதாக கூறப்படுகிறது.
அதேவேளையில், அணித்தலைவரான ரஜத் படிதாரும், சென்னைக்கு எதிரான போட்டியில் விரலில் காயமடைந்தார். அவர் காயத்தில் இருந்து மீண்டு வந்தாலும், அடுத்த ஒரு போட்டியில் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது.
அவ்வாறு விளையாட முடியாமல் போனால், அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பரான ஜிதேஷ் சர்மா அணியை வழிநடத்துவார் என கூறப்படுகிறது.
இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர், வரும் மே 16 முதல் மீண்டும் தொடங்கும் என்றும், முதல் போட்டி பெங்களூரு மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.