குடியேற்றம் - வாக்கெடுப்பிற்குத் தயாராகும் உளள்துறை அமைச்சர்!

12 வைகாசி 2025 திங்கள் 00:37 | பார்வைகள் : 1438
பொது விவாதங்களில் பொதுவாக்கெடுப்பு பயன்பாடு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், உள்துறை அமைச்சர் புரூனோ ரத்தெய்யோ (Bruno Retailleau) இந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஒருமுறை குடியேற்றப் பிரச்சினையில் (IMMIGRATION) பிரெஞ்சு மக்களிடம் கருத்து கேட்கும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
«சட்டம் பிரெஞ்சு மக்களைப் பாதுகாக்காத போது, சட்டம் மாற்றப்படல் வேண்டும். பொதுவாக்கெடுப்பை நாடுவதற்காக அரசியலமைப்பை திருத்தப்படல் வேண்டும்»
என ஓர் ஊடகச் செய்தியில் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரான்சின் இறையாண்மையை மீட்டெடுக்கும்நோக்கத்துடன், மக்கள் இறையாண்மையில் ஆழமாக தான் நம்பிக்கை கொண்டதாகவும், தேசிய அளவில் இதற்கான வாக்கெடுப்பை நடாத்த தயாராக உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
«நிச்சயமாக, குடியேற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சமூகப் பிரச்சினைகள் குறித்து நான் யோசித்து வருகிறேன்»
«நமது சமூக அமைப்பு, நமது ஐரோப்பிய அண்டை நாடுகளை விட மிகவும் தாராளமானது, ஆனாலும்; குடியேற்றம் அதன் மீது தொடர்ச்சியான அழுத்தத்தை செலுத்துகிறது»
«குடியேற்றப் பிரச்சினை குறித்து பிரெஞ்சு மக்களிடம் ஆலோசனை கேட்பேன், ஏனெனில் அது எல்லாவற்றின் மையத்திலும் உள்ள பிரச்சினை ஆகும். இது அனைத்தையும் பாதிக்கும்»
எனத் தெரிவித்த உள்துறை அமைச்சர், தொடர்ந்தும் குடியேற்றப் பிரச்சினையையே தனது தேர்தல் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றார்.