Panthéon அரண்மனையில் இருந்து விழுந்து - இளம்பெண் பலி!!

11 வைகாசி 2025 ஞாயிறு 21:17 | பார்வைகள் : 3522
பரிஸ் 5 ஆம் வட்டாரத்தில் உள்ள Place du Panthéon அரண்மனையில் இருந்து விழுந்து இளம் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
மே 11, இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவசர மருத்துவக்குழுவினருக்கு தகவல் கிடைத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 18 வயதுடைய பெண் ஒருவர் கட்டிடத்தில் இருந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
எவருமே அறியாத வண்ணம் அவர் கட்டிடத்தின் கூரைக்கு ஏறியுள்ளதாகவும், இது ஒரு தற்கொலை முயற்சி எனவும் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு உளநல சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1