Paristamil Navigation Paristamil advert login

இம்மானுவல் மக்ரோனின் யுக்ரேன் விஜயத்தை எதிர்க்கும் மரீன் லு பென்!

இம்மானுவல் மக்ரோனின் யுக்ரேன் விஜயத்தை எதிர்க்கும் மரீன் லு பென்!

11 வைகாசி 2025 ஞாயிறு 19:50 | பார்வைகள் : 1154


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கு அமைதியை ஏற்படுத்த விருப்பம் இல்லை என  தீவிர வலதுசாரிய அரசியல் தலைவர் மரீன் லு பென் குற்றம் சாட்டியுள்ளார்.

இம்மானுவல் மக்ரோன் யுத்தத்தை ஆதரிக்கின்றார். அதற்கு தூண்டுதலாக செயற்படுகிறார். அவருக்கு யுக்ரேனில் அமைதி ஏற்படுத்த விருப்பம் இல்லை என மரீன் லு பென் இன்று மே 11, ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இத்தாலிக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், அங்கு வைத்து ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போது இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மக்ரோன் நேற்று சனிக்கிழமை பிரித்தானிய - போலந்து பிரதமர்கள் மற்றும் ஜெர்மனியின் சான்சிலர் ஆகியோருடன் யுக்ரேனுக்கு பயணித்திருந்தார். அங்கு 30 நாட்கள் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதே இந்த பயணத்தின் நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்