Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

இஸ்லாமிய வெறுப்புக்கு எதிராக பரிசில் ஆர்ப்பாட்டம்! - பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!!

இஸ்லாமிய வெறுப்புக்கு எதிராக பரிசில் ஆர்ப்பாட்டம்! - பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!!

11 வைகாசி 2025 ஞாயிறு 17:49 | பார்வைகள் : 10874


பிரான்சில் இஸ்லாமிய வெறுப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு பரிசில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்றனர்.

இன்று மே 11, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில் La France Insoumise கட்சித்தலைவர் Jean-Luc Mélenchon அவருடன் இணைந்து Louis Boyard மற்றும் Éric Coquerel ஆகிய அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர்.

அண்மையில் Aboubakar Cissé எனும் இஸ்லாமியல் ஒருவர் பள்ளிவாசல் அருகே வைத்து கொல்லப்பட்டிருந்தார். இந்த தாக்குதலைக் கண்டித்தும், இஸ்லாம் மதம் மீதான வெறுப்பைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

பரிசை தவிர்ந்து மேலும் சில நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

வர்த்தக‌ விளம்பரங்கள்