Paristamil Navigation Paristamil advert login

மொனாக்கோ கூடைப்பந்தாட்ட அணி - இளம் வீரர் பலி!!

மொனாக்கோ கூடைப்பந்தாட்ட அணி - இளம் வீரர் பலி!!

11 வைகாசி 2025 ஞாயிறு 15:20 | பார்வைகள் : 636


மொனாக்கோ தேசிய கூடைப்பந்தாட்ட அணி (équipe de N3 de l'AS Monaco Basket) விபத்திற்கு உள்ளாகி உள்ளது.

இவர்கள் சென்ற சிறு பேருந்து (Minibus) நெடுஞ்சாலை A8 இல் இன்று அதிகாலை 3 மணியளவில், Cannet-des-Maures அளவில் விபத்திற்கு உள்ளாகி உள்ளது.

கூடைப்பந்தாட்ட அணியின் 17 வயது வீரர் இந்த விபத்தில் கொல்லப்பட்டுள்ளார். மற்றைய 24 வயதுடைய வீரரும் படுகாயமுற்ற நிலையில் உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பயிற்சியாளர், சாரதி உட்பட மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். இவர்களிற்கும் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தின்போது போது மீட்புப் பணிக்காக 26 தீயணைப்புப் படை வீரர்கள் செயற்பட்டுள்ளனர்.

விபத்தினைத் தொடர்ந்து போக்குவரத்துகள் இந்த நெடுஞ்சாலையில் பெரும் இடையூற்றிற்கு உள்ளாகி இருந்தது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்