Paristamil Navigation Paristamil advert login

அதிகாலை விபத்தில் காயமடைந்தவர்களை கொழும்பு அழைத்துவர விசேட நடவடிக்கை

அதிகாலை விபத்தில் காயமடைந்தவர்களை கொழும்பு அழைத்துவர விசேட நடவடிக்கை

11 வைகாசி 2025 ஞாயிறு 15:22 | பார்வைகள் : 2779


ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் இன்று காலை  இடம்பெற்ற பேருந்து விபத்து மற்றும் நேற்று வெலிமடையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு அழைத்து வர இரண்டு ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில், இரத்மலானை விமானப்படை தளத்தில் இந்த இரண்டு ஹெலிகொப்டர்களையும் விமானப்படை தயார் நிலையில் வைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நடவடிக்ைக இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு பெல் 412 ரக ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்