பிரதமரின் ‘பொது வாக்கெடுப்பு’ திட்டத்துக்கு அமோக வரவேற்பு!
11 வைகாசி 2025 ஞாயிறு 13:00 | பார்வைகள் : 10184
வரவுசெலவுத்திட்டத்தின் சில பகுதிகளை நிறைவேற்ற பொதுமக்களின் ஆதரவு தேவை எனவும், அவர்களிடமே முடிவினை சமர்ப்பிக்க பொது வாக்கெடுப்பு ஒன்று கொண்டுவரலாம் என பிரதமர் பிரான்சுவா பெய்ரூ அண்மையில் திட்டம் ஒன்றை முன்மொழிந்தார். இந்த திட்டம் தொடர்பில் பொதுமக்கள் என்ன நினைக்கின்றார்கள் என கருத்துக்கணிப்பு ஒன்று மேற்கொள்ள்ப்பட்டது.
”"சமீபத்திய மாதங்களில், பல அரசியல் பிரமுகர்கள் பல்வேறு விஷயங்களில் பொதுவாக்கெடுப்பு நடத்தும் விருப்பத்தைக் குறிப்பிட்டுள்ளனர். கொள்கையளவில், நீங்கள் அதை ஆதரிப்பீர்களா அல்லது எதிர்ப்பீர்களா?"
எனும் கேள்வில் கருத்துக்கணிப்பில் கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு 83% சதவீதமான மக்கள் “ஆம்” என தெரிவித்துள்ளனர். (அவர்களில் 55% சதவீதமானவர்கள் ஆதரவும், 28% சதவீதமானவர்கள் பலத்த ஆதரவும் வழங்குவதாக தெரிவித்தனர்.)
ஏனைய 17% சதவீதமானவர்கள் ‘இல்லை’ என தெரிவித்துள்ளனர்.
***
"வரவிருக்கும் மாதங்களில் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், அதில் என்னென்ன பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?
எனும் கேள்வியும் அதே கருத்துக்கணிப்பில் கேட்கப்பட்டது. 59% சதவீதமானவர்கள் கடன், வரி போன்ற பொருளாதாரத்துடன் தொடர்புடைய கேள்விகள் விவாதிக்கப்படவேண்டும் எனவும், ஓய்வூதியம், குடியேற்றம் போன்றவை என 52% சதவீதமானவர்களும்,
பாடசாலை, விடுமுறை, திரைப்பாவனை (கணனி, தொலைபேசிகள்), சிறுவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள சமூகவலைத்தளங்கள் போன்றவை என 16% சதவீதமானவர்கள் தெரிவித்தனர்.
**
கருத்துக்கணிப்பை sondage Elabe நிறுவனம் BFMTV தொலைக்காட்சிக்காக மேற்கொண்டிருந்தது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan