1000 பேர் ஒன்று கூடிய ரேவ் இசையாட்டம்!!

11 வைகாசி 2025 ஞாயிறு 12:26 | பார்வைகள் : 602
சட்டவிரோத ரேவ் இசைக் களியாட்டம் ஒன்று (rave-party) Lot எனும் இடத்தில் நடந்துள்ளது.
பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலியைச் சேர்ந்த 1000 பேர் இந்தக் களியாட்டத்தில் பங்கு கொண்டுள்ளனர்.
இவை சட்ட விரோதமாக தடைகளை மீறி நடாத்தப்பட்டுள்ளது.
இரு நகரங்கள் முழுவதும் முறையற்று வாகனங்கள் தரிக்கப்பட்டிருந்தன. இதனால் பிராந்தியசாலைகள் பல மூடப்பட்டு, மக்களை வேறு பாதையால் பயணிக்கும்படி காவற்துறையினர் அறிவித்திருந்தனர்.
«நாங்கள் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான சோதனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மேற்கொள்கின்றோம். நடைமுறையில் உள்ள மாகாண ஆணைகளை பின்பற்றாதது, போதைப்பொருள், மது மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான சட்டம் போன்ற அனைத்து மீறல்களுக்கும் அபராதம் விதிக்கப்படும்»
«சட்டவிரோத ஒன்று கூடலினால் சுகாதார அபாயங்கள் ஏற்படும், அது ஒரு பெரிய கூட்டம், சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாடு, அதிகப்படியான மது அருந்துதல், விபத்து அபாயங்கள் போன்றவை ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் போது ஏற்படும் ஏற்படும். இது மிகவும் ஆபத்தானது»
என இந்த மாவட்டத்தின் ஆணையபளர் Claire Raulin தெரிவித்துள்ளார்.