Paristamil Navigation Paristamil advert login

பரிசில் "Comité du 9-mai" பேரணி.. 1,000 பேர் பங்கேற்பு!!

பரிசில்

11 வைகாசி 2025 ஞாயிறு 05:58 | பார்வைகள் : 2787


நேற்று சனிக்கிழமை நண்பகலின் பின்னர் பரிஸ்  
பேரணி ஒன்று இடம்பெற்றது. Comité du 9-mai எனப்படும் தீவிர வலதுசாரி ஆர்வலர்கள் இதில் பங்கேற்றனர்.

தீவிர வலதுசாரி செயற்பாட்டாளரான  Sébastien Deyzieu என்பவர் 1994 ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்த போது விபத்தொன்றில் கொல்லப்பட்டிருந்தார். அதை அடுத்து அவரது நினைவு நாளை ஞாபகப்படுத்தும் நோக்கில், “Comité du 9-mai” எனும் பேரணியை ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக நேற்று பரிசில் நண்பகலின் பின்னர் இந்த பேரணி இடம்பெற்றது. 6 ஆம் வட்டாரத்தின் Port-Royal தொடக்கம் rue des Chartreux வரை இந்த பேரணி இடம்பெற்றது. இதில் 1,000 பேர் வரை பங்கேற்றிருந்தனர்.

அவர்கள் “Sébastien Deyzieu Present” எனும் பதாகை ஒன்றை கைகளில் வைத்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்