வாகனத்தால் மோதியவர் தொடர்ந்தும் விசாரணையில்!!

10 வைகாசி 2025 சனி 13:01 | பார்வைகள் : 402
PSG வெற்றிக்களிப்பில் கொண்டாடிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதியதாகச் சொல்லப்படும் வாடகைச் சிற்றுந்தின் சாரதி தொடர்ந்தும் காவற்துறையினர் விசாரணையில் உள்ளார். இவரது விசாரரணை காலவரையரை மேலும் 24 மணித்தியாலத்தால் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
«ஆயுதத்துடனான (சிற்றுந்து) வன்முறை, தப்பியோட்டம், ஆபத்தில் இருந்தவர்களிற்கு உதவாமல் சென்றமை» போன்ற குற்றங்கள் இவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
31 வயதுடைய VTC சாரதியான அவர் தானாகவே வந்து சரணடைந்துள்ளார்.
«அன்று மாலை, இவர் வேலை செய்து கொண்டிருந்தார், இவருடைய வாகனத்தில் ஒரு பயணி இருந்துள்ளார். இவர் தவறான நேரத்தில் தவறான இடத்தில் பணியில் சென்றுள்ளார். அவரது வாகனம் பலரால் சூழப்பட்டது»
«இது ஒரு துரதிர்ஷ்டவசமான சூழல். அவரது வாடிக்கையாளர் பயந்துபோய் சிற்றுந்தில் இருந்து இறங்கினார். சாரதி வாகனத்திற்கு அடியில் ஆட்கள் இருப்பதை கவனிக்கவில்லை. அவர் அவர்களை ஒருபோதும் வேண்டுமென்றே தாக்கியிருக்கவில்லை»
என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இதில் பலத்த காயங்களிற்கு உள்ளாகி உயிராபத்தான கட்டத்திலிருந்தவர், ஆபத்தான கட்டத்ததைத் தாண்டி சிகிச்சை பெற்று வருகின்றார்.