போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆலோசனை

10 வைகாசி 2025 சனி 11:12 | பார்வைகள் : 2785
போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், டில்லியில் பிரதமர் மோடியுடன் , தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை நடத்தினார்.
எல்லை பகுதியில், பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தி உள்ளது. ஆனால், வானிலையே இடைமறித்து சுட்டு வீழ்த்தி நமது பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்'' என இந்திய ராணுவம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், எல்லையில் நிலவும் போர் பதற்றம் குறித்து, டில்லியில் பிரதமர் மோடியுடன் , தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை நடத்தினார். அடுத்தடுத்து அத்துமீறும் பாகிஸ்தானின் தாக்குதல் குறித்தும், தாக்குதல்களை முறியடித்து வருவது குறித்தும் பிரதமர் மோடிக்கு அஜித் தோவல் விளக்கம் அளித்துள்ளார்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1