டில்லியை தாக்க முயன்ற பாக்.,கின் பத்தா: ஏவுகணையை சுட்டு வீழ்த்தியது இந்தியா

10 வைகாசி 2025 சனி 10:12 | பார்வைகள் : 188
நீண்டதூரம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணையான பத்தாவை, தலைநகர் டில்லியை நோக்கி பாகிஸ்தான் ஏவியது. அதனை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது.
இந்திய வான்படை பாகிஸ்தானின் லாகூர், ராவல்பிண்டி, இஸ்லாமாபாத் மற்றும் 3 விமானத்தளங்களை தாக்கியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் இந்தியாவின் தலைநகரான டில்லியை குறிவைத்து ‛பத்தா' ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது அதனை ஹரியானாவின் சின்ஸா அருகே இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
400 கி.மீ, வரை சென்று இலக்கை தாக்கும் திறன் படைத்தது இந்த ‛பத்தா' ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது.