இந்தியா- பாகிஸ்தான் போர் பதட்டம்: தணிக்கும் முயற்சியில் ஆக்கபூர்வமாக செயல்பட சீனா விருப்

10 வைகாசி 2025 சனி 09:12 | பார்வைகள் : 170
சீன வெளியுறவுத்துறை இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்படுத்த, ஆக்கபூர்வமாக செயல்பட சீனா விரும்புகிறது என்று, சீனா அரசின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதட்டம் உச்சத்தை அடைந்துள்ளது. இந்திய எல்லையோர நகரங்களில் குடியிருப்புகள், மத வழிபாட்டு தலங்களை பாகிஸ்தான் தொடர்ந்து தாக்க முயற்சிக்கிறது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், சீன அரசின் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:
இந்த விவகாரத்தை சீனா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த மோதல், மிகவும் கவலை அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது. அமைதி, ஸ்திரத்தன்மை உருவாக்குவதை கருத்தில் கொண்டு இரு தரப்பினரும் பிரச்னையை பெரிதாக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்று வலியுறுத்துகிறோம்.
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இது மிகவும் முக்கியம். சர்வதேச நாடுகளும் இதைத்தான் விரும்புகின்றன. பிரச்னைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் ஆக்கபூர்வமாக செயல்பட சீனா விரும்புகிறது. இவ்வாறு சீன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.